Monday, September 11, 2017

விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா

ஒரு ஊர்ல -

தாழ்ந்த நிலமுண்டு
நிலமோ வளமன்று
விழுந்ததோர் விதைத்துண்டு
விதையிலோ பெண் சிசுக்கன்று
துளிர்விட்டது பல கனவுகள் கண்டு
கனவை நனவாக்கும் வைராக்கியமுண்டு
கனவோ வைத்தியம் கற்று
சேவை செய்யும் நாட்டமும் உண்டு !!

பாரதம் என்ற நாடுண்டு
ஆண்டான் அரக்கன் தி/நிமிர்ந்து நின்று
இயற்றினான் NEETடமான சட்டம் ஒன்று
சட்டமோ மருத்துவம் கற்க மாராத்தானென்று
மார்தாண்டனோ மார்தட்ட
மறுப்பாரோ (தமிழாழ்வார்) -
பங்கிட்டு பங்குகொண்டு பங்குண்டு பங்குதீர்ந்து
பகையிட்டு பகைகொண்டு பகையுண்டு பகைதீர்ந்து
பழியிட்டு பழிகொண்டு பழியுண்டு பழிதீர்ந்து
மீண்டும் பங்கிட்டு பங்குகொண்டு --------------
அரக்கன் அரங்கேற்றிய ஆளுமை நாடகம் !!
தமிழாழ்வாரோ கூற்று பட்டறையின் நடிப்பு திலகம் !!

துளிர்விட்ட காலம் முதல்
தான் கொண்ட க/நனவுகள் யாவும்
அரக்கன் NEETடிய கடாயுதத்தில் தவிடுபொடியாக
கனவு களைந்து வைராக்கியம் தொலைந்து
வாழ்விழந்து வலுவிழந்து வழியிழந்து;
தான் மறைந்தாள்தான்
நாளைய துளிர்களின் கனவுகள்
நனவாக வழிக்கிட்டும் என்ற புதிய கனவோடு
நீ மாண்டு போனாயோ !!



யார் சார் செஞ்சது இந்த தப்பு. யாரால அனிதா செத்தா !!
-------------------------------------------------------------------------------------
1) ஆட்சியில் இருந்து நீட்டை பறிகொடுத்த தமிழக ஆட்சியரா ?
2) நோட்டுக்கு ஓட்டளித்து ஊழலை ஆட்சியில் அமர்த்திய தமிழக மக்களா ?
3) கனவு கண்ட அனிதாவா ?


வேதாளமாக  அர. பாலகிருட்டிணன் (R Balakrishnan)



உவமை
=========
விதை, துளிர் - அனிதா
தாழ்ந்த நிலம் - சமுதாயம்
வளமன்று – ஏழ்மை
மாரத்தான் – NEET Competition
நாளைய துளிர் – Next Generation
மார்த்தாண்டன், அரக்கன் - Central
தமிழாழ்வோர் - state
விக்ரம் - தமிழக மக்கள்
வேதாளம் - உங்கள் நான்

விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா

ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...