Sunday, November 20, 2016

இரு வரி கவிதைகள்

இரு வரி கவிதைகள்
======================


உறக்கம்
==========
நிலவின் காந்தலில் உருகியதோர் இரவு
சிந்திய பனித்துளியே நீ கண்ணுறங்கு !!


கனவு
=======
என் கனவுகளில் உன்னை உறங்கவைத்தேன்
உன் கனவுகளில் நான் உறங்கும்போது !!


நிறம்
======
அழகே செவ்வாழை
      உன் நிறம்
உன் அழகை கண்டு மலைத்து போனேனடி
      நான் மரம் !


காபி - வாழ்க்கை
===================

இனித்தது கசப்பான காபி
   சக்கரை இல்லாமல் !
கசந்தது இனிப்பான வாழ்க்கை
   அன்பே நீ இல்லாமல் !


கூந்தல்
========
உன் அடர்ந்த கருங்கூந்தல் கார்மேகமோ
உச்சி வெயிலில் கொட்டுகிறது மழை என் மீது மட்டும்


நினைவுகள்
=============
சுதந்திரமாய் சுற்றி திரிந்த என் நினைவுகளை
ஏன் சிறை பிடித்தாய்
என் நினைவுகள் இப்போது உன்னை மட்டுமே
சூழ்ந்து கொண்டிருக்கிறது !


குரல்
=====
குடகு மழை சாரலிலே
குழைந்து பாடும் குயில்களே
மனம் வெட்கி போனீர்களே
அவளின் இன்னிசை குரலில்


BT Inlife Girl
==========
அவள் இப்போது INLIFE
இனி அவள் தான் ENLIFE


கோயில்
=========
கோயிலை கூட சுற்றியது இல்லை
பக்தியும் இல்லை
சுற்றி வருகிறேன் உன்னை
நாள்தோறும் பதினாறு முறை
என்ன காரணத்தினாலோ !


கவிஞன்
=========
பெண்களால் எதையும் சாதிக்க முடியும்
என்பதை நிரூபித்துவிட்டாய்
ஆம்
என்னையே கவிஞனாக்கி விட்டாயே


இதயம்
========
என் இதயம்
உனக்காக துடிக்கிறது
என்னை உயிர் வாழவைக்க


கோவை 
=========
அவள் சுள்ளென்று பார்த்த பார்வையில் !
சுற்றுகிறது என் மனம் கோவையில் !


என்னை நானறிந்தேன்
========================
உன்னை தேடி வந்தேன்
என்னை கண்டுகொன்டேன்


கடல்
======
அலையடித்து சலிக்கவில்லை உனக்கு
உன்னை ரசித்து சலிக்கவில்லை எனக்கு !!


காதல் பகடை
================
குழந்தையின் கையில் சிக்கிய பகடையன்றோ நான் !!
உருட்டி விளையாடுகிறாள் என்னை, காதல் பறைச்சாற்றி !!


மின்சார கண்கள்
===================
மின்னொளியில் மின்னிய மின்னல்
என் காதல் தேவியின் மின்சார கண்கள் !!

கண்ணீர்
==========
மழையும் நின்று போனது
என் காதல் தேவியின் கண்களில் பட்டு கண்ணீராகி போவோமோ என்று


பறந்து செல்லவா
==================
என்னிடம் இருப்பதோ இருகைகள்
உன்னை தழுவுகையில் மாறுகிறது இரண்டும் இறக்கைகள்
அணைத்துக்கொண்டு விண்ணில் பறந்திடவோ !!


மழை கொண்ட வரம்
========================

என்னை வரம் வாங்கி வந்தாய் மழை துளியே
பல திங்களாய்
காண துடிக்கும்
கண்டால் முறைக்கும்
அழகு பதுமையின் இலகு தேகத்தில் தவழ்ந்து விளையாடுகிறாயே !!


மானம்
========
வாழ்வெங்கிலும் வாழ்வேன் மானத்தோடு
அதை துறக்கும் தருவாயில்
காரணத்தார் உயிர் கொன்று
மாண்டு போவேன்
அன்னை மாடி சாய்ந்து !!



No comments:

Post a Comment

விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா

ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...