Monday, April 10, 2017

மேகம் நான் ! தேவதை நீ ! சுயநல காதல் !!

மேகம் நான் !  தேவதை நீ !  சுயநல காதல் !!
=============================================

வானில் மிதப்பேன்
விமானம் அல்ல !
காற்றினால் அலைக்கழிக்கப்படுவேன்
சளைத்தவன் அல்ல !
சூரியன் உரிந்த நீரை சேமிப்பேன்
கள்வன் அல்ல !
இரக்கமில்லா கல் நெஞ்சன்
வெகுவிரைவில் கலங்குபவன் அல்ல !

காய்ந்த பயிர்களும்
கரைந்த குளங்களும்
வாடிய பூமியும்
வாய்க்காத விவசாயமும்
நிறைந்த சோகமும்
நிறையாத வயிறும்
கண்டு
உள்ளம் உவந்து கண்ணீர் சிந்தினேன்
மழையாக !!

பூமி தழைக்க தொடங்கிய தருணம்

மழையும் நின்று போனது
என் காதல்தேவியின் கண்களில் பட்டு,
அவள் கண்ணீராகி போனதால் !!

நீரின்றி அமையாது உலகெனினும்
அவள் கண்ணீர் துடைக்கும் சுயநலமிக்கதன்றோ
என் காதல் :(

No comments:

Post a Comment

விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா

ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...