Monday, September 11, 2017

விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா

ஒரு ஊர்ல -

தாழ்ந்த நிலமுண்டு
நிலமோ வளமன்று
விழுந்ததோர் விதைத்துண்டு
விதையிலோ பெண் சிசுக்கன்று
துளிர்விட்டது பல கனவுகள் கண்டு
கனவை நனவாக்கும் வைராக்கியமுண்டு
கனவோ வைத்தியம் கற்று
சேவை செய்யும் நாட்டமும் உண்டு !!

பாரதம் என்ற நாடுண்டு
ஆண்டான் அரக்கன் தி/நிமிர்ந்து நின்று
இயற்றினான் NEETடமான சட்டம் ஒன்று
சட்டமோ மருத்துவம் கற்க மாராத்தானென்று
மார்தாண்டனோ மார்தட்ட
மறுப்பாரோ (தமிழாழ்வார்) -
பங்கிட்டு பங்குகொண்டு பங்குண்டு பங்குதீர்ந்து
பகையிட்டு பகைகொண்டு பகையுண்டு பகைதீர்ந்து
பழியிட்டு பழிகொண்டு பழியுண்டு பழிதீர்ந்து
மீண்டும் பங்கிட்டு பங்குகொண்டு --------------
அரக்கன் அரங்கேற்றிய ஆளுமை நாடகம் !!
தமிழாழ்வாரோ கூற்று பட்டறையின் நடிப்பு திலகம் !!

துளிர்விட்ட காலம் முதல்
தான் கொண்ட க/நனவுகள் யாவும்
அரக்கன் NEETடிய கடாயுதத்தில் தவிடுபொடியாக
கனவு களைந்து வைராக்கியம் தொலைந்து
வாழ்விழந்து வலுவிழந்து வழியிழந்து;
தான் மறைந்தாள்தான்
நாளைய துளிர்களின் கனவுகள்
நனவாக வழிக்கிட்டும் என்ற புதிய கனவோடு
நீ மாண்டு போனாயோ !!



யார் சார் செஞ்சது இந்த தப்பு. யாரால அனிதா செத்தா !!
-------------------------------------------------------------------------------------
1) ஆட்சியில் இருந்து நீட்டை பறிகொடுத்த தமிழக ஆட்சியரா ?
2) நோட்டுக்கு ஓட்டளித்து ஊழலை ஆட்சியில் அமர்த்திய தமிழக மக்களா ?
3) கனவு கண்ட அனிதாவா ?


வேதாளமாக  அர. பாலகிருட்டிணன் (R Balakrishnan)



உவமை
=========
விதை, துளிர் - அனிதா
தாழ்ந்த நிலம் - சமுதாயம்
வளமன்று – ஏழ்மை
மாரத்தான் – NEET Competition
நாளைய துளிர் – Next Generation
மார்த்தாண்டன், அரக்கன் - Central
தமிழாழ்வோர் - state
விக்ரம் - தமிழக மக்கள்
வேதாளம் - உங்கள் நான்

Thursday, July 6, 2017

இது போதும் எனக்கு இது போதுமே



சூரியன் இமை மூட துடிக்கும் நேரம்
என் பக்கம் கொஞ்சம் தென்றல் வீசும்
காற்றில் மிதக்கும் கடலின் வாசம்
கடலின் ஓசை காதுகளில் கொஞ்சி பேசும்
அலைகள் எனது கால்கள் தழுவ, பாதம் கூசும்

இது போதும் எனக்கு இது போதுமே 

எது யாருடையது ?? இது யாருக்கு சொந்தம் ?? புரியா விடை ??



துடிக்கிறது என் இதயம்
உன் நெஞ்சில் !!  (இந்த இதயம் யாருக்கு சொந்தம்)

சிந்திக்கிறது என் மனம்
உன் நினைப்பில் !! (இந்த மனம் யாருக்கு சொந்தம்)

கேட்கிறது உன் குரல்
என் காதுகளில் !!

உறங்குகிறது உன் ஆத்மா
என் கனவுகளில் !!

விழுகிறது என் பார்வை
உன் கண்களில் !!

ஏறுகிறது என் தாலி
உன் கழுத்தில் !!

வாழ்கிறது எந்தன் உயிர்
உன் வயிற்றில் !!

கழிகிறது என் வாழ்க்கை
உன் மகிழ்வில் !!

என்னுள் ஓர் மாற்றம்

தலை வருகிறேன்
அங்கே சில வெள்ளை முடிகள் எட்டி பார்த்து பல் இளிக்கின்றது !!

பல் துலக்குகிறேன்
அங்கே ஒரு கருத்த பல் ஒளிந்து கொண்டு கண்ணடிக்கிறது !!

இளையாரோடு உரையாடுகிறேன்
எந்தன் உதடுகள் அறிவுரை கூற துடிக்கின்றது !!

நான் எழுத முற்படுகிறேன்
என் எண்ணங்களிலும் கற்பனைகளிலும் முதிர்ச்சி வெளிப்படுகிறது !!

தமிழ் பாடல்கள் கேட்கிறேன்
அதன் இசை மறந்து, பாடல் வரிகளை ரசிக்கிறேன் !!

என்னுள் ஏன் இந்த மாற்றமோ !!

Tuesday, July 4, 2017

நட்பு - பிள்ளையார் சுழி


எம் தேன் கூட்டினுள் பிளவொன்று வருமெனில்
அது பகைமையினால் ஒருபோதும் அல்ல
தேனின் அதீத சுவையின் திகட்டலால் !!

இக்கவிதையினை யாம் படைத்ததனால்
எம் நட்பு முறிவுண்டு முடிந்தென்று நினைத்தீரோ !!

இக்கவி எம் நட்பின் முற்றுப்புள்ளி அல்ல
யாமிட்ட பிள்ளையார் சுழி !!


Cigarette

இருண்ட வானம் விடிகிறது
விடிந்த வானம் மறைகிறது
அன்பே நான் உன்னை சுவாசிக்கயில் !!

உன்னை மறக்க முடியவில்லை
கைவிட மனமுமில்லை

என் துணைவிக்கோ
உன்னை பிடிக்கவில்லை
உன்னால் என்னையும் பிடிக்கவில்லை

என் மனமோ உன்னை நாடுதடி
பகலில் கூட உன்னை கண் தேடுதடி !!

உன்னை மறவேனோ
அன்றி நான் மறைவேனோ !!

அவள் என்னை கடந்து செல்கயில்

அவள் என்னை கடந்து செல்கயில்
====================================

இருண்ட வானம் விடிகிறது !
விடிந்த வானம் மறைகிறது !

வாரிய தலை கலைகிறது !
முறுக்கிய மீசை வளைகிறது !
கட்டிய வேட்டி அவிழ்கிறது !
வாயில் சுருட்டு அணைகிறது !

நாட்கள் பல, நான் காத்து கிடக்க !
என் நிழல், என்னை மறந்து உன்னோடு செல்வதேனோ !!

அன்பே நீ என்னை கடந்து செல்கையில் !!

Friday, May 12, 2017

The Conjuring


The Conjuring
===========

Why does the wind has to blow all of a sudden ?
Why does the cloud needs to drizzle after a long sunny day ?
Why does a dog has to chase me unlike the normal days ?

God - Why should these things happen after watching a horro movie.

wait !!!
did i just use the word "God"
Ohh Conjuring - What you just did to me. am becoming Rational.

கவிஞர் வாலி

கவிஞர் வாலி
===============

பத்மஸ்ரீ
கலைமாமணி
வாலிப வாலி

நீ பாட்டிக்கும் கவி எழுதுவாய்
பல பார்ட்டிக்கும் கவி எழுதுவாய்
உன் எழுத்து - அக்காலத்து கிழவிக்கும் பொருந்தும்
இக்காலத்து குமரிக்கும் பொருந்தும் !!

கவிஞன் பேசுவதில்லை
பேசுகையில் பொருளில்லை
பொருள் இருப்பினும் நகை இல்லை
இவை யாவும் உள்ளவனுக்கு
அழகில்லை நடிப்பதுமில்லை
நீர் எங்கிருந்தய்யா வந்தீர் !!

நீ மறைந்தாலும்
உன் மறையாத சொத்துக்களை  (எழுத்துக்களை)
என் சொத்தை பற்கள் மொச்சை கொட்டும் (தாளம் கொட்டும்) !!

உன் எழுத்தில் வகை உண்டு
பேச்சில் நகை உண்டு
நடிப்பில் சுவை உண்டு
அழகில் மிகை உண்டு
முகத்தில் புண் நகை உண்டு
மற்றவர்களிடம் பகை உம் உண்டு
(திறமைக்கேற்ற திமிர்)

உன்னை கண்டு வியந்து எழுத கற்ற என்னை
உன் நினைவு நாளுக்கு எழுத வைத்துவிட்டாயே !!

என்றென்றும் வாலி

Monday, April 10, 2017

மேகம் நான் ! தேவதை நீ ! சுயநல காதல் !!

மேகம் நான் !  தேவதை நீ !  சுயநல காதல் !!
=============================================

வானில் மிதப்பேன்
விமானம் அல்ல !
காற்றினால் அலைக்கழிக்கப்படுவேன்
சளைத்தவன் அல்ல !
சூரியன் உரிந்த நீரை சேமிப்பேன்
கள்வன் அல்ல !
இரக்கமில்லா கல் நெஞ்சன்
வெகுவிரைவில் கலங்குபவன் அல்ல !

காய்ந்த பயிர்களும்
கரைந்த குளங்களும்
வாடிய பூமியும்
வாய்க்காத விவசாயமும்
நிறைந்த சோகமும்
நிறையாத வயிறும்
கண்டு
உள்ளம் உவந்து கண்ணீர் சிந்தினேன்
மழையாக !!

பூமி தழைக்க தொடங்கிய தருணம்

மழையும் நின்று போனது
என் காதல்தேவியின் கண்களில் பட்டு,
அவள் கண்ணீராகி போனதால் !!

நீரின்றி அமையாது உலகெனினும்
அவள் கண்ணீர் துடைக்கும் சுயநலமிக்கதன்றோ
என் காதல் :(

கண்ணீர்

கண்ணீர்
==========

அன்று நீ அழ, எதற்கோ !
கண்ணீர் துடைக்க நானிருந்தேன் ..

இன்று நான் அழ, உன்னால் !
கண்ணீர் துடைக்க யாருண்டோ !!

அன்று

அன்று
=======

அன்று
துடைக்க முடியவில்லை
துடைக்க மனமும் இல்லை
இருப்பதில் பெருமை இல்லை
துடைத்தாள் மறைவதும் இல்லை
எனதாடையில் படிந்த மலமே !!

இன்று
நீ மறைந்தும், மணப்பதேனோ என்னாடை !!

நான் மறைந்தாலும் உன்னை மறவேனோ

நான் மறைந்தாலும் உன்னை மறவேனோ
============================================

தனிமை வெறுத்தால்
துணையாய் நின்றேன் !!

கட்டி அழுதாள்
காதல் மலர்ந்தேன் !!

சிமிட்டிய கண்களில்
சிலிர்த்து போனேன் !!

சிரித்து பேசினால்
சிதைந்து போனேன் !!

போதும் போதும் தொலைந்துவிடு என்றால்
மீதம் என்ன மாய்ந்தே போவேனோ !!

உடலை மண் தின்னுமடி
ஆயினும் உயிர் உன்னை நாடுமடி
நான் மறைந்தாலும், உன்னை மறவேனடி, கண்மணியே !!

Friday, January 6, 2017

இதழோரம் சிந்திய வெட்கம்

வெட்கம்
=========

ஆலங்கட்டி மலையில் காய்ந்தேன் !
அக்கினி வெயிலில் நனைந்தேன் !
சென்னையின் உக்கிரத்தில் உறைந்தேன் !
மார்கழி பனியில் வியர்த்தேன் !

அவளின் இதழோரம் சிந்திய வெட்கத்தில் !!

Thursday, January 5, 2017

UK Client Visit on October-2 2012

வெள்ளையனை வெளியேற்றினான் காந்தி

அவன் பிறந்த இந்த பொன்னாளில்
என் மென்பொருள் நிறுவனத்தில்
விடுப்பு துறந்து
வெள்ளையனை வரவேற்று
கரவொலி எழுப்பி
மாலையிட்டு (மனதில் மண்டியிட்டு)
அவன் புகழ் பாடி
அவன் நாட்டுக்கு உழைக்கும்
பாவியாகி போனேனோ

காந்தி பிறந்த இந்நாட்டில் நான் பிறந்தேன்
என்றெண்ணுகையில்
மனம் வெட்கி, தலை குனியும், பாவப்பட்ட இந்தியன் !!

சுருள் கூந்தலில் சிக்கிய நான்

சுருள் கூந்தலில் சிக்கிய நான்
================================

மலரை சூடிய உன் கூந்தல்
பூத்த அவரை கொடியின் பந்தலோ !!

சுற்றியது அவரை கொடி பந்தலில் !
சுற்றியதோ என் பார்வை உன் கூந்தலில் !

பருகி சென்றது வண்டு
அவரை பூவின் தேனை !!
கூந்தலை முகர சென்று சுருண்ட கூந்தலில்
சிக்கி கொன்டேனடி நான் கேனை  !!

Tuesday, January 3, 2017

கனவில் ஓர் உறக்கம்

கனவில் ஓர் உறக்கம்
=====================


நான் உறங்கினாலும்
தூக்கம் கெட்டு போனேன்
உன் கனவுகளில் !!

நீ உறங்காவிடிலும்
தூங்க வைத்தேனடி

என் கனவுகளில் !!

விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா

ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...