Friday, October 14, 2016

நிலைகுலைந்த நான்

நிலைகுலைந்த நான்
======================

சுழிந்த அவளது முகத்தின்
      அழகில் மெலிந்தேன் !
கனிந்த அவளது மார்பின்
      குவியலில் புதைந்தேன் !
இனிந்த அவளது தமிழின்
      சுவையில் உறைந்தேன் !
சரிந்த அவளது இடுப்பின்
      மடிப்பினில் வளைந்தேன் !
குழைந்த அவளது உடலின்
      பாவனையில் நிலை குலைந்தேனடி நான் !!

Thursday, October 13, 2016

கவிதையாக வாழ்வேனோ

கவிதையாக வாழ்வேனோ
=============================

நான் கவிதை எழுதி ஆகின சில வருடங்கள்
எந்தன் காதலின் வெளிபாடன்றோ கவிதை

ஏன் எழுத வேண்டும் கவிதை
நான் கவிதையாகவே வாழ்கயில்

கவியும் புலப்பட்டது
காதலும் புலப்பட்டது
திருநீர் இட்டு
என் நெற்றியின் ஓரம் அவள் சுழற்றி அடித்த தென்றலில் !!

என்னம்மா இப்படி பண்றீங்களே மா

என்னம்மா இப்படி பண்றீங்களே மா
======================================

பெண்களிடம் இருப்பதோ இயற்கையான ஒய்யார நடை
நடை மெட்டுக்கு அசைந்தாடிடும் அவள் இடை
இடை ஆட்டத்திற்கு தாளம் கொட்டிடும் அவளின் சடை
இந்த கலைக்கு ஏன் போட வேண்டும் தடை
அதை காண தவம் கிடக்கும் ஆண்கள் படை
இன்று வரை அது ஒரு புரியாத விடை

இருந்தும் கலாச்சார மிகுதியில்
வலக்கால் இடக்காலின் இடதிலும்
இடக்கால் வலக்காலின் வலதிலும்
தடுமாறிடும் பூனை நடையென்ன

காண்பதிற்கு சற்று அழகூட்டினாலும்
உடலை வருத்திய ஒய்யாரம் அவசியமோ !

என்னம்மா இப்படி பண்றீங்களே மா

இரு வரி கவிதைகள்

இரு வரி கவிதைகள்
======================

நிலவின் காந்தலில் உருகியதோர் இரவு
சிந்திய பனித்துளியே நீ கண்ணுறங்கு !!

காதல்பிரிவு

காதல்பிரிவு
=============

பசி இல்லை
உண்டேன் !

காற்று இருக்கும் உணர்வில்லை
சுவாசித்தேன் !

கவிஞன் இல்லை
கவி எழுதினேன் !

உயிர் இல்லை
வாழ்ந்தேன் !

உன்னை பிரிந்த
இத்துனை நாட்கள் ....

அறிமுகம் - பாலனின் கவிச்சுவடிகள்


வங்க கரையோரம்
சங்க தமிழ் பாடும்
சிங்க தமிழனின்
தங்க வரிகள் !!

பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் காதல் வேண்டி விண்ணப்பம்

பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் காதல் வேண்டி விண்ணப்பம்
=================================================================

இனிய மலர்ந்த நாள் வாழ்த்துக்கள் !!

உன் அழகிய முகம் மலர்ந்த தாமரை மலரோ !
மலரின் அழகை கண்ட மயக்கத்தில்
நீ மலர்ந்த நாள் மறந்து போவேனோ !

மலரோடு நம்முறவும் இணைந்தினிந்து மலர்ந்திடுமோ !
அன்றி நீ மலர்ந்து, நான் மெலிந்து மாய்ந்திடுவேனோ !

நம் காதல் வளர்பிறையாய் வளர்ந்திடுமோ !
அன்றி என் உயிர் தேய்பிறையாய் தேய்ந்திடுமோ !

நாம் மலைவாழ் பறவையாய் சிறகடித்து பறந்திடுவோமோ !
நான் மட்டும் சிறகொடிந்து வீழ்ந்துடுவேனோ !

நாம் குயில் போல் ஒரு குரலில் இசைந்திடுவோமோ !
அன்றி நான் மட்டும் குரலிழந்து சோர்ந்திடுவேனோ !

உன் விழிகளால் விழித்திட
உன் உதடுகளால் புன்னகைத்திட
உன் மூச்சினால் சுவாசித்திட
உன் நாவினால் சுவைத்திட
உன் முகமாய் மலர்ந்திட
உன் நினைவாய் நெகிழ்ந்திட
உன் இதயமாய் துடித்திட
எனக்கு வரமொன்று கிடைத்திடுமோ !
அன்றி செய்த தவம் போதாது பரிதவித்திடுவேனோ !
அன்றி இறுதிவரை தவமிருந்து மடிந்திடுவேனோ !

இரு விழிகளில் ஓர் பார்வையாய்
இரு கரங்களில் ஓர் வணக்கமாய்
இரு மூக்கினில் ஓர் சுவாசமாய்
இரு செவிகளில் ஓர் ஒலியாய்
இரு உயிர்களில் ஓர் வாழ்வாய்
வாழ்வாங்கு வாழ்ந்திட, என் இதயமொன்று !
தகிட தகிட துடிக்குதடி இருமடங்கு !
என்றென்றும் நீ வேண்டுமென்று !

Wednesday, October 12, 2016

சுயனலவாதியாகிய நான்

சுயனலவாதியாகிய நான்
========================

மின்னுகிறது கர்நாடகத்தின் அழகு
என் முகத்தில் மட்டும்
என்ன செய்வேன்

காவிரியை உரிமை கொண்டாடும்
கர்நாடகத்தின் கோர தாண்டவத்தால்

என் தமிழர்கள் தாகம்
  தணியாமல் தவிக்க !!
பயிர்கள் பழுத்து
  காய்ந்து மடிய !!
விவசாயிகள் பசியால்
  சுருக்கில் உயிர் மாய்க்க !!
எனது தாய் நீதிமன்றம் தவறாமல்
  காவிரி அன்னைக்காக போராட !!
கர்நாடக தமிழர்கள்
  கர்நாடகத்தினரால் தாக்கப்பட !!

நான் மட்டும்
ஏதும் அறியாதவனாய்
கர்நாடக மங்கையின் நளினத்தில் மயங்கி
கர்நாடகத்தை போற்றி துதி பாடும்
சுயநலவாதியாகி போனேனடி கண்ணே !!

அவள் சிரிப்பு

சிரிக்காதே பெண்ணே
குழந்தை முன் கூட

குழந்தைக்கும் காதல் பிறக்கும்
உன் சிரிப்பை கண்டால்

பிஞ்சு குழந்தையின் மனத்தில்
நஞ்சை ஊட்டாதே

குழந்தைக்கு காதலா :O :O
அப்போ என் நிலைமை :( :(

உன்னிடமா பிறந்தது என் கவிதை

கவிதைக்கே கவிதையா
உன்னை பார்த்த பின்புதான்
கவிதைக்கே அர்த்தம் புரிந்தது எனக்கு !!

என் கவிதையில்
உன் காதல் சுகம் கண்டேன்
ஆதலால் என் கவிதையின் மீது காதல் கொண்டேன்

என் எழுத்துகள்
உனது கொஞ்சிய பேச்சிலும் !!
என் கருத்துகள்
உனது குலைந்த பாவனையிலும் !!
என் கற்பனை வளம்
உனது முகத்தின் வெட்கத்திலும் !!
என் சொல்நடை
உனது எடையின் வளைவிலும் !!
சிக்கி தவிப்பதேனடி 

Tsunami 2004 - உருண்டோடியது ஒன்பது வருடங்கள்

பெண்ணின்(கடலின்) கோர தாண்டவம்
பெண்ணே கடலலையாய் உருவெடுத்து
படகுகளை தூக்கியடித்தாய் !!
மாந்தர்களை இரக்கமில்லாமல் விழுங்கினாய் !!
15 அடிக்குமேல் எழுந்து
ஆனந்த தாண்டவம் ஆடினாய் !!

ஏனடி இந்த ஆக்ரோஷம் ?
யார் மேல் உனக்கு கோபம் ?
லட்ச மனித உயிர்களை விழுங்கும் அளவுக்கு !!

பெண் குழந்தை பிறந்தவுடன்
உறவினரின் வற்புறுத்தலால்
சிசு கொலை செய்யும் தாயின் மீதா !!

பெண்களுக்கு சம உரிமை கொடுக்காமல்
சமயலறையில் பூட்டிய தகப்பன் மீதா !!

பெண்களை காதலிப்பதுபோல் காதலித்து
ஏமாற்றும் வாலிபர்கள் மீதா !!

பெண்களை கடத்தி சென்று
அவள் விருப்பத்திற்கு எதிராக
கற்பை சூறையாடும் வெறியர்கள் மீதா !!

திருமணத்தின்பேரில் பெண்களை உடமையாக்கி
அடிமை படுத்தும் கணவன் மீதா !!

முதிர்ந்த வயதில் ஒரு வாய் அன்னமிட
தயங்கும் பெற்ற பிள்ளை மீதா !!

பெண்ணுரிமை கிடைக்கும் என்று
பொறுத்து பொறுத்து பொறுமையிழந்து
பொங்கி விட்டாயோ !!
சுனாமியாய் உருவெடுத்து
இந்திய நாட்டையே புரட்டி போட்டு விட்டாயே !!

-- அர. பாலகிருட்டிணன்

உயிர் சேர்த்தால் என் இதயத்தில்

இரவு மறைந்து போகும்
இருளில் உன்னை காண முடியாமல் !!
சூரியன் இரவை கொன்று உதிக்கும்
உன் அழகை தரிசிக்க !!
மரம் நிழல் தந்து சூரியனை மறைக்கும்
உன் மீது அனலடித்தால் !!
காற்று புயலடித்து மரத்தை சாய்க்கும்
உன் மீது இலைகள் உதிர்ந்தால் !!
மலை காற்றை மறைக்கும்
உன் கண்களில் தூசி பட்டால் !!
மழை மலையை சரிக்கும்
நீ உயரம் கண்டு பயந்தால் !!
குகை குடை கொடுக்கும்
உன்னை மழை நனைத்தால் !!

அது குகையல்ல என் இதயம்
உன்னை காத்தது என் இதயமல்ல
உயிரற்ற இதயத்தில் புகுந்து
உயிர் சேர்த்து என்னை
நீ காத்தாயடி !!


- அர. பாலகிருட்டிணன்

Siva Subramaniyam's(T2R) Last Day in BT

சிவா

Trouble இல்லாத வாழ்க்கை
நமக்கேது
எத்தனை Trouble வந்தாலும்
Resolve செய்யும் திறமையுடையவன் நீ
அந்த திறமையய் நான்கு வருடங்களாக
T2R-ல் மெருகேற்றியிருக்கிறாய் !!

உன்னை வெளியேற்றியதின் விளைவாக
நாங்கள் T2R- Resource- i இழக்கவில்லை
Resolve-i இழந்துவிட்டொம், அதனால்
அதிக Trouble-I பெற்று இருக்கிறோம் !!

உன் இடத்தை நிரப்புவது கடினமாகினும்
நீ வளர்த்த சிங்கங்கள்(சிவா&சயன்)
நாளை உன் பெயர் சொல்லும் !!

நீ உடலால் மெல்லியவனாகினும்
உள்ளதினால், திறமையினால், பொருமையினால் வல்லியவன் !!

பல்லி போல் தோன்றும் நீ
பலத்தில் குறைந்தவன் அல்ல !!
உன் வெளியேற்ப்பு எங்களுக்கு பலவீனம்
என்று சொல்லிதான் புரிவதல்ல !!
காலத்தின் கட்டாயத்துக்கு உன்னை பலி
கொடுத்ததால், பலியானதோ அவர்கள் !!
பழுது பார்க்கும் உன்னை இழந்து
இன்று பழுதாகிறோம் நாங்கள் !!

வினை விதைத்தவன் வினை அருப்பான்
தினை விதைத்தவன் தினை அருப்பான்
தினை விதைத்தவனுக்கு
வினை சேர்த்து விட்டோமே !!

BT யில் சாதித்த நீ
உன் வருங்காலத்திலும் வாழ்கையிலும் சாதிக்க

எங்களது Soup Boys(-1) இன் சார்பாக
மனமார்ந்த வாழ்த்துக்கள்

Shobana's Last day in BT

Shobana

பாரதியார் கண்ட புதுமை பெண்ணே!
ஒரு stellar award கிடைக்குமா என்று ஏங்கி தவிக்கும் 
இந்த நிறுவனத்தில் 3-ACE Award களை
வாங்கி குவித்த சாதனை மங்கை !!

நீங்கள் Online Team இன் ஆலமரம்
நீங்கள் சும்மாக செல்லவில்லை உறதியான
விழுதுகளாகிய எங்களை வளர்த்துவிட்டு செல்கிறீர்கள்
நீங்கள் சென்றாலும் மரத்தை நாங்கள்
தாங்கி காப்போம் !!

நீங்கள் புன்னகைத்தால்
Megablocker வெடித்து சிதறும் !
நீங்கள் கோபப்பட்டால்
Online Team நடுநடுங்கும் !
நீங்கள் கண் இமைத்தால்
மணிமுள் 6-ஐ தாண்ட மறுக்கும் !
நீங்கள் தட்டி கொடுத்தால்
Execution பறந்தோடும்
நீங்கள் பிரிந்தால் அனைத்தும்
பந்தலிட்டு பாடைகட்டும் !!
 :(
நீங்கள் இருந்தால்தான் இது Online Team
நீங்கள் இல்லை என்றால் இது Noline Team

போகாதே என்று சொல்ல மனம் வந்தாலும்
பாசக்கடமை உங்களை அழைப்பதால்
தடுக்க முடியாமல் தவிக்கிறோம் !!

நீங்கள் எப்போது திரும்ப வந்தாலும்
உங்களுக்காக BT கதவுகள் திறந்தே இருக்கும்
(ஆனால் உள்ளே நாங்கள் இருப்பது சந்தேகமே)

சொந்த பிள்ளைக்காக செல்லும் உங்களுக்கு
வளர்ப்பு பிள்ளைகளான எங்களது
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!


என்னை மறந்து போனாளே


என்னை மறந்து போனாளே
என் கண்களில் பூத்த மலரே
விதை ஊன்றி, களை பறித்து
உரமிட்டு, நீர் பாய்ச்சி
வளர்த்தவன் வேறோருவனாகினும்(தகப்பன்)!
நீ பூத்து குலுங்கி மகிழ்வித்தது பலரை(நண்பர்கள்)!

உன்னை உரிமையாக்க துடித்த வண்டுகளில்
என் பெயரும் உண்டு!

என் கண் இமைகளில் தரிசித்த உன்னை,
இதுவரை கண்டிராத ஒருவன்
மணமகனாக வாகை சூடி வந்து!
பறித்தால் வாடி போவாய் என்பதறியாதவனாய்
உரிமையுடன் பறிக்க கண்டு!
சிற்பியின் உளி பட்டு
சிதறிய சிதறலலானேன்!

இந்த வண்டின் காதல்
கணவனிடம் உள்ள போதாவது 
நீயறிவாய் என்று நான் காத்திருக்க!
"கொண்டவன்" உடன் நீ வருகையில்
"கண்டவன்" ஆகி போனேனடி நான்!

- அர. பாலகிருட்டிணன்

கவிதையாய் நீ

கவிதையாய் நீ
================

உன் புன்னகை முகம்
மலர்ந்த தாமரையை மிஞ்சும்!
உன் கூந்தலின் நீளம் 
குறைந்தது என் உயரம் கொஞ்சம்!
உன் குலைந்த பாவனையில்
நிந்தன் இதயம் புகுந்தேன் தஞ்சம்!
உன் குரலில் ஒலிக்கும் சொற்கள்
அழகிய ஆங்கிலம் கொஞ்சும்!
உன் தேன் சுரக்கும் இதழ்கள்
என்னிடம் முத்தம் கெஞ்சும்!
உன் கரம் பற்றிட
துடிக்கிரதடி என் நெஞ்சம்!



- அர. பாலகிருட்டிணன்

Monday, October 10, 2016

சுற்றுலா - கோவா

GOA - திரும்பி பார்கிறேன் - இன்றோடு 1 வருடம்
==================================================

கோவா வெளிநாடு என்பதறியாமல்
இந்திய மாநிலம் என்று நினைத்திருந்தேன் 
எங்கு காணிலும் வெள்ளையர்கள் !!


ஊர் முழுவதும் குறுகிய சாலைகள் !!
அங்கே இரு சக்கர வாகனங்களில் பறந்து செல்லும்
ஜோடி இளம்சிற்றுக்கள் !!
அவர்களை துரத்தி செல்லும்
நம்மூர் இளங்காளைகள் !!
(அது நாங்கள் அல்ல :P)

ஊர் எங்கும் கடற்கரைகள் !!
அங்கே துள்ளி விளையாடும்
ஜோடி வெள்ளை புறாக்கள் !!
அதை மொய்க்கும் ஆயிரம் கண்கள் !!
(அதில் முப்பது கண்கள் எங்களுடையது ;))

சூரியனின் இளம் வெப்பத்தில்
மெல்லிய மழைச்சாரல் !!
பசுமை காடுகளை கொண்ட
சிறு சிறு மலைகள் !!
மலை சரிவில்
அழகிய குன்றுகள் !!
குன்றுகளை தோற்றுவிக்க
மிதமாக அலையடிக்கும் கடல் !!
கடல் அலையில் புரண்டு
விளையாடும் குழந்தைகள் !!
(விளையாடுவது குழந்தைகள் மட்டுமா :P)

எங்கு காணிலும் குட்டை கால் சட்டை
அணிந்த வடஇந்திய பெண்கள்
பளிங்கு தொடையுடன் !!
துறவிகளே வாய் பிழந்தாலும்
ஆச்சர்யபடுவதற்கில்லை !!
(பிரம்மனின் படைப்பே படைப்பு :D)

கோவாவில் பெண்கள் அழகாக இருக்கிறார்களா
அல்லது அழகான பெண்களே கோவாவுக்கு வருகிறார்களா
என்ற சந்தேகமும் ஓடுகிறது !!

ஊரெங்கு தேடியும் இல்லை
தேநீர் நிலையங்கள் !!
பெட்டி கடையில் கூட பீர் பாட்டில்கள்
வாட்டர் பாட்டில்களை விட மலிவு விலையில் !!
(என்ன கொடும சரவணா இது)

உலகம் சுற்றுகிறது என்பதை
கோவாவில் தான் ஒப்புக்கொண்டேன் !!
மின்சாரம் இல்லாவிடிலும் கூட
24 மணி நேரமும் சலிக்காமல் சுற்றுகிறது !!
(எந்த கடையில் மது அருந்தியதோ :P)

இரவு 2 மணிக்கு மறையும் சூரியன்
மதியம் 1 மணிக்கே உதிக்கிறது !!
(என்னே ஒரு விந்தை)

வெள்ளையனை வெளியேற்றினான் காந்தி
கோவாவை மட்டும் ஏன் விட்டுவைத்தானோ !!


மீண்டும் செல்ல காத்திருக்கும்
- அர. பாலகிருட்டிணன் (R. Balakrishnan)

விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா

ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...