Wednesday, October 12, 2016

என்னை மறந்து போனாளே


என்னை மறந்து போனாளே
என் கண்களில் பூத்த மலரே
விதை ஊன்றி, களை பறித்து
உரமிட்டு, நீர் பாய்ச்சி
வளர்த்தவன் வேறோருவனாகினும்(தகப்பன்)!
நீ பூத்து குலுங்கி மகிழ்வித்தது பலரை(நண்பர்கள்)!

உன்னை உரிமையாக்க துடித்த வண்டுகளில்
என் பெயரும் உண்டு!

என் கண் இமைகளில் தரிசித்த உன்னை,
இதுவரை கண்டிராத ஒருவன்
மணமகனாக வாகை சூடி வந்து!
பறித்தால் வாடி போவாய் என்பதறியாதவனாய்
உரிமையுடன் பறிக்க கண்டு!
சிற்பியின் உளி பட்டு
சிதறிய சிதறலலானேன்!

இந்த வண்டின் காதல்
கணவனிடம் உள்ள போதாவது 
நீயறிவாய் என்று நான் காத்திருக்க!
"கொண்டவன்" உடன் நீ வருகையில்
"கண்டவன்" ஆகி போனேனடி நான்!

- அர. பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment

விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா

ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...