பெண்ணின்(கடலின்) கோர தாண்டவம்
பெண்ணே கடலலையாய் உருவெடுத்து
படகுகளை தூக்கியடித்தாய் !!
மாந்தர்களை இரக்கமில்லாமல் விழுங்கினாய் !!
15 அடிக்குமேல் எழுந்து
ஆனந்த தாண்டவம் ஆடினாய் !!
ஏனடி இந்த ஆக்ரோஷம் ?
யார் மேல் உனக்கு கோபம் ?
லட்ச மனித உயிர்களை விழுங்கும் அளவுக்கு !!
பெண் குழந்தை பிறந்தவுடன்
உறவினரின் வற்புறுத்தலால்
சிசு கொலை செய்யும் தாயின் மீதா !!
பெண்களுக்கு சம உரிமை கொடுக்காமல்
சமயலறையில் பூட்டிய தகப்பன் மீதா !!
பெண்களை காதலிப்பதுபோல் காதலித்து
ஏமாற்றும் வாலிபர்கள் மீதா !!
பெண்களை கடத்தி சென்று
அவள் விருப்பத்திற்கு எதிராக
கற்பை சூறையாடும் வெறியர்கள் மீதா !!
திருமணத்தின்பேரில் பெண்களை உடமையாக்கி
அடிமை படுத்தும் கணவன் மீதா !!
முதிர்ந்த வயதில் ஒரு வாய் அன்னமிட
தயங்கும் பெற்ற பிள்ளை மீதா !!
பெண்ணுரிமை கிடைக்கும் என்று
பொறுத்து பொறுத்து பொறுமையிழந்து
பொங்கி விட்டாயோ !!
சுனாமியாய் உருவெடுத்து
இந்திய நாட்டையே புரட்டி போட்டு விட்டாயே !!
-- அர. பாலகிருட்டிணன்